தென்காசி சூறாவளிக்கு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்

தென்காசியில் சூறாவளியுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.

Update: 2021-05-17 05:13 GMT

அடியோடு சாய்ந்து சேதமடைந்த வாழை மரங்கள்

தென்காசி மாவட்டத்தில் சூறாவளியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அதேபோல் தென்காசி  அருகே உள்ள நன்னகரம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து உள்ளது. இங்கு கற்பகவள்ளி, வெள்ளை சிங்கம், சக்கை வாழை உள்ளிட்ட வாழைகளை பயிர் செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் இந்த வாழைத்தார்களை அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தமிழக அரசு இந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#instanews #tamilnadu #Tenkasi #cyclone #Damage #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தென்காசி #அறுவடைக்கு #banana #trees #readyfor #வாழைமரங்கள் #வாழைமரங்கள்சேதம் #harvest #சூறாவளி #damage #farmers #loss #duetorain #heavycyclone

Tags:    

Similar News