தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-03-18 05:34 GMT

தென்காசி நகர்மன்ற கூட்டம் நடந்தது.

தென்காசியில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலையடுத்து இன்று தென்காசி நகராட்சி அலுவலகத்தில் முதல் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 33மன்ற உறுப்பினர்களும், நகராட்சி ஆணையரும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், வரி விதிப்பு கோப்புகள் நகர்மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வர வேண்டும் என உறுப்பினர்கள் அனைவரும் எடுத்துக்கூறினர். இதையடுத்து 18 மன்ற பொருட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 2000ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு 2006ல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு  தெரிவிப்பதாக கூறி பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் தி.மு.க. உறுப்பினர்கள் பெருபான்மையாக இருப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News