ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை

Update: 2021-04-14 07:00 GMT

பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 4 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தென்காசியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக பாவூர்சத்திரம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள், கடைகள், வீடுகள் அளவீடு செய்யப்பட்டு, இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 4 வழிச்சாலையில், பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேம்பால தூண்கள் அமைக்க மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இழப்பீடு வழங்குதல், சாலையோர மரங்கள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், விரைவில் நான்கு வழிச்சாலைப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என தெரிகிறது.

Tags:    

Similar News