ஓய்வு பெற்ற பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சார்பில் கருத்தரங்கு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஓய்வு பெற்ற அலுவலர்கள் அமைப்பு சார்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் நல்லுறவு மற்றும் மாணவர்களிடையே நற்பண்பு மேம்படுத்துதல் தொடர்பாக கல்வி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2022-07-23 13:21 GMT

தென்காசி மாவட்டம் இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கம்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஓய்வு பெற்ற அலுவலர்கள் அமைப்பு சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் நல்லுறவு மற்றும் மாணவர்களிடையே நற்பண்புகளை மேம்படுத்தும் விதமாக கருத்தரங்கம் தென்காசி மாவட்டம் இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த கல்விக் கருத்தரங்கில் ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் மாணவர்களுக்கிடையே நற்பண்புகள் மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கருத்தரங்கில் சமீப காலங்களில் சில மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றாமல் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல், பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், தளவாட சாமான்களை உடைத்தல் மற்றும் வகுப்பறையில் ஆசிரியர்களிடம் விரும்பத்தகாத முறையில் நடந்தது போன்ற இனங்கள் குறித்து தலைமையாசிரியர், பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் இந்நிகழ்வுகளை எங்கே எனவும் மீண்டும் நிகழாதவாறு கையாளலாம் என்பது குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுடைய தரத்தை உயர்த்திடவும் ஆங்கில கல்விக்கு இணையாக மாணவர்களுடைய எதிர்காலம் நலன் கருதி எவ்வாறு பயிற்சிகள் வகுப்புகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கு திறன் மேம்பாடு அறிவியல் மேம்பாடு உள்ளிட்டவைகள் இங்கு கலந்துரையாடப்பட்டு அவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இறுதியாக ஆசிரியர் மணவர்களின் நல்லுறவு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களையும் இந்த கருத்தரங்கில் ஆசிரியர்களிடம் கேட்டு தமிழக முதல்வருக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் சமர்பிக்கப்படும் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கில் முனைவர் பழனிவேலு, அமைப்பின் செயலாளர் மாரியப்பன், ஆசிரியர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News