தென்காசியில் சாலை பாதுகாப்பு வார விழா

தென்காசி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 08:07 GMT

தென்காசி போலீஸ் டிஎஸ்பி மணிமாறன், சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, இருசக்கர வாகனத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல் மற்றும் தென்காசி ஸ்பீடு டீம் குரூப் ஆப் கம்பெனிஸ் இணைந்து நடத்திய தேசிய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல்துறையுடன் ஸ்பீட் டீம் குரூப் ஆப் கம்பெனி இணைந்து சாலை விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் உறுதிமொழி எடுத்தும் சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.

தகுதியான ஓட்டுனர் உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது எப்போதும் சீட் பெல்டுகளை அணியுங்கள் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது சக பயனீரும் சீட் பெல்ட் அணிவது நல்லது வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டாதீர்கள் போக்குவரத்து விதிகளின்படி இருசக்கர வாகனங்களின் வேகவரம்பு குறிப்பாக நெடுஞ்சாலைகளுக்கு மணிக்கு 50 கிலோமீட்டர், நகரத்திற்குள் மணிக்கு 40 கிலோ மீட்டருக்கும் விடாமல் இருக்க வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களின் வேக வரம்பு குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் நகர்புற சாலைகளில் மணிக்கு 60 கிலோ மீட்டருக்கும் மிகாமல் இருக்க வேண்டும் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு சாலையில் இடையூறு செய்யாமல் கட்டாயம் வழிவிட வேண்டும்.

சாலையில் சுற்றித்திரியும் விலங்குகள் மீது எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை துண்டு பிரச்சனைகளும் அவர்கள் வழங்கினார் தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல்துறையிடம் ஸ்பீடு டீம் குரூப் ஆப் கம்பெனி இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Similar News