தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-26 06:10 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடி ஏற்றினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய  கொடியேற்றி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்திய நாட்டின் 74-ஆவது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் சார்பில் ஐ. சி. ஈஸ்வரன் பிள்ளை பள்ளி வளாக மைதானத்தில் சரியாக காலை 8.05 மணிக்கு இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் தென்காசிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் . துணை காவல் காண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, நகராட்சி காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதேபோல் குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நாட்டின் 74வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் தென்காசி வட்டார தலைவர் பெருமாள், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சந்தோஷ், மாவட்ட துணை செயலாளர் வைகை குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News