கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-01-09 01:14 GMT

உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

தென்காசியில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 1000 ஏக்கர் உளுந்து பயிர்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டுள்ள உளுந்து பயிர்களுடன் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த அதீத கன மழையில் காரணமாக விவசாயத் தொழில்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக சேர்ந்த மரம் வட்டாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ள உளுந்து சாகுபடி முற்றிலுமாக மழை தண்ணீரில் மூழ்கி நாசம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சேந்தமரம் வட்டார பகுதியில் உள்ள வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கணக்கிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடுகளை வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News