தென்காசியில் ரமலான் பெருநாள் தொழுகை

தென்காசியில் ரமலான் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

Update: 2023-04-21 05:10 GMT

ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்ற போது எடுத்த படம்.

தென்காசியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்ற நிலையில், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டு பெருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் கொண்டாட்டத்துக்கு தயாராக இருக்கிறார்கள். 30 நாட்களும் புனித குரானின் வசனங்களை படித்தும், ஏழைகளுக்காக பொருள் ஒதுக்கி வைத்தும் நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் தாங்கள் சேமித்த பொருள் அல்லது பணத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கும் ஈகைத்திருநாளாக ரம்ஜான் உள்ளது.

இதையொட்டி தென்காசியில் மஸ்ஜிதூர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ரம்ஜான் தொழுகை நடந்தது. பெருநாள் தொழுகைக்கு தலைவர் மசூதுஅலி தலைமை வகித்தார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

பெருநாள் தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டு பெருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தொழுகைக்கு முன்பாக ஏழைகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.

Similar News