கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு: தென்காசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கோயில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-10-27 01:55 GMT

கோவில் நகைகளை உருகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில் நகைகளை உருகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கோயில் நகைகளை உருக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன் சிறப்புரையாற்றினார். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ராமராஜா, இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் முருகன் மாவட்ட செயலாளர் பால்ராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இசக்கிமுத்து, குளத்தூரான், இந்து ஆட்டோ முன்னணி கற்குடிமணி சங்கரநாராயணன், இந்து அன்னையர் முன்னணி மாலா,  சுரன்டை நகர நிர்வாகிகள் துணைத்தலைவர் மாரியப்பன், பொதுச்செயலாளர் ஆறுமுகம் செயலாளர் குமாரபெருமாள், பொருளாளர் மாரியப்பன், பிஜேபி சுரண்டை நகரத் தலைவர் அருணாச்சலம், தென்காசி அனைத்து ஒன்றிய நகர இந்துமுன்னணி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட 350பேர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News