கனிம வள கொள்ளை! இந்திய கம்யூ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

கனிம வள கொள்ளையை கண்டித்து தென்காசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-14 10:15 GMT

பட விளக்கம்: கனிம வளம் கொள்ளையை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கனிம வள கொள்ளையை கண்டித்து தென்காசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கனிம வளம் கொள்ளையால் தென்காசி மாவட்டம் பாலைவனமாக மாறி வருவதாக கூறி பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்,  தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு கனிமவளக் கொள்ளை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தென்காசி பகுதியில் உள்ள முக்கிய பகுதியான தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News