குற்றாலம் பேரூராட்சியில் மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு

குற்றாலம் பேரூராட்சியில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் ஒத்திவைப்பு.

Update: 2022-04-30 07:47 GMT

குற்றாலம் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை தொடர்ந்து நியமன குழு உறுப்பினர் தேர்தலிலும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மொத்தம் 8 வார்டுகளை கொண்டது. இதில் 4 வார்டுகளை திமுக-வும் 4 வார்டுகளை அதிமுக என சமபலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக, அதிமுக-இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அதே சமயம் பேரூராட்சி தலைவர் தேர்தல் இரண்டு முறை நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே பங்கேற்றனர். திமுக உறுப்பினர்கள் 4 பேர் பங்கேற்காததால் பெருபாண்மையோர் இல்லை என தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நியமன குழு உறுப்பினர் தேர்தலிலும் அதிமுக கலந்து கொண்ட நிலையில் திமுக வழக்கம் போல புறக்கணித்ததால் இந்த தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. தலைவர் பதவியை கைப்பற்ற திமுக ஏதேனும் திட்டம் திட்டி வருகிறதா, தேர்தலை சந்திக்காமல் திமுக உறுப்பினர்கள் பின்வாங்க காரணம் என்ன என அப்பகுதி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News