குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த புள்ளிமான்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

சுரண்டை தீயணைப்பு படையினர் சுமார் 5 வயது மதிக்கத்தக்க புள்ளி மானை லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-03-30 07:00 GMT

மீட்கப்பட்ட புள்ளிமான்.

தென்காசி மாவட்டம் சுரண்டை ஆணைகுளத்தில் வசித்து வருபவர் ஜெயா. இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கணிதவியல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

காலையில் இவர் வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே வந்தபோது வீட்டின் அருகே புள்ளிமான் ஒன்று தஞ்சமடைந்திருந்ததை பார்த்து உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வன் தலைமையில் ஏட்டு ரவீந்திரன் மற்றும் வீரர்கள் ராஜேந்திரன், திலகர், உலகநாதன், சரவணகுமார், சமுத்திர பாண்டி, குமார், விவேகானந்தன், பொன்ராஜ் ஆகியோர் சுமார் 5 வயதுள்ள புள்ளி மானை லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.

ஏற்கனவே கோடைகாலம் துவங்கி வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் வரலாமெனவும், அதில் வந்த மானை நாய்கள் விரட்டியிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News