ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு: கோவையிலிருந்து சென்னைக்கு நடைபயணம்

கோவையில் துவங்கும் ஜிஎஸ்டி யாத்திரை 18 நாட்கள் நடைபயணமாகச் சென்று சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நிறைவடையும்

Update: 2022-02-28 02:45 GMT

ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 20ம் தேதி கோவையிலிருந்து சென்னைக்கு ஜிஎஸ்டி பாதயாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன்  தெரிவித்தார்.

குற்றாலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் 5வது மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில்  பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன்  செய்தியாளர்களுக்கு   பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சென்னை முதல் குமரி வரை 930 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பேரணி நடத்தினோம். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அடுத்த கட்டமாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை 52 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டும், மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 20ம் தேதி கோவையிலிருந்து சென்னைக்கு ஜிஎஸ்டி பாதயாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்துகிறோம்.

கோவையில் துவங்கி 18 நாட்கள் பாதயாத்திரையாக சென்று சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நிறைவடையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படும். விலைவாசி குறையும் காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு கேஸ் விற்கப்பட்ட போது விலை அதிகம் என்று போராட்டம் நடத்தினர். இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் விலை உயர்வின் காரணமாக விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர். மேலும் சைக்கிள் பயன்பாட்டுக்கும் மாறி வருகின்றனர். கடந்த ஏழரை வருட மோடி ஆட்சியில் ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறிவிட்டனர். பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறிவிட்டனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நடைபெறும் பாதை யாத்திரைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Tags:    

Similar News