கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வார்டு மறுசீரமைப்பு கோரி மனு

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வார்டு மறுசீரமைப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-01-29 00:30 GMT

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் வார்டுகளை மறுசீரமைப்பு செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில்,  33 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த 2016 ம் ஆண்டு எடுத்த சர்வேயின்படி,  மொத்த வாக்காளர் எண்ணிக்கை 70950 ஆகும். பின்னர் 2021-ல் சுமார் 8000 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதற்கேற்ப நகராட்சியில் 33 லிருந்து 38 வரை உயர்ந்திருக்க வேண்டும்.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாழும் 13 வார்டுகளில் இருந்து 12 - காக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்மன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் செயல்களில் அரசு ஈடுபட்டுள்ளதாக, ஒரு தரப்பினர் கூறினர்.

எனவே, அரசு வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக,  மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News