வடகிழக்கு பருவமழை: குற்றாலத்தில் தீயணைப்புத்துறை பாதுகாப்பு ஒத்திகை

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குற்றாலத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

Update: 2021-09-15 10:15 GMT

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தென்காசி தீயணைப்புத் துறை சார்பில் குற்றாலத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தொடர்பாக தென்காசி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் குற்றாலத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்புப் பணிகள் சார்பில் குற்றாலம் படகு குளத்தில் வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மற்றும் படகு விபத்துக்குள்ளானவர்களை மீட்பது குறித்தும் வெள்ள அபாயத்தின் போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தற்காத்துக் கொள்வது மற்றும் வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது தொடர்பான செயல் முறை விளக்கம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்து காட்டினர்.

மேலும் வாகன விபத்து தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தென்காசி தனியார் கல்லூரி மருத்துவ குழுவினர் செய்து காட்டினர் இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையின் சிறப்பு உபகரணங்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.

Tags:    

Similar News