இனி இதனை யாரும் செய்யக்கூடாது: அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு

இனி வரும் காலங்களில் தான் பங்கேற்கும் மக்கள் நல்வாழ்வு துறை நிகழ்ச்சிகளுக்கு தனக்கு பொன்னாடை அணிவிக்க கூடாது என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்

Update: 2024-02-29 03:59 GMT

அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இனி இதனை யாரும் செய்யக்கூடாது என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு விட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் மையம், ஒளி புகா அறை, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரத்த சேமிப்பு அலகு வல்லம் மற்றும் சங்கரன்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இனி வரும் காலங்களில் தான் பங்கேற்கும் மக்கள் நல்வாழ்வு துறை நிகழ்ச்சிகளுக்கு தனக்கு பொன்னாடை அணிவிக்க கூடாது. குறிப்பாக தனக்கும் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் எவருக்கும் பொன்னாடைகள் அணிவித்தல் கூடாது.

துறை சார்ந்த அதிகாரிகள் இதற்காக எந்தவித கணக்குகளும் எழுத முடியாது, எனவே அவர்களை சிரமப்படுத்த கூடாது என்பதற்காக இதனை தெரிவிப்பதாக கூறினார். எனவே தான் பொறுப்பில் இருக்கும் காலம் வரை இந்த மாதிரியான நிகழ்வுகளை யாரும் ஈடுபட வேண்டாம் என கூறுவதாகவும் இது குறித்து துறையின் செயலாளர்களுக்கு தெரியப்படுத்தி அணைத்து அதிகாரிகளுக்கு அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார்,ராஜா,சதன் திருமலை குமார், இணை இயக்குனர் பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News