தென்காசி காசிவிஸ்வநாதர் காேவிலில் மாசி திருவிழா தேராேட்டம் காேலாகலம்

தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2022-02-17 01:34 GMT

தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காசிவிஸ்வநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா, மாசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் ஆலயத்தின் உள்ளே வைத்து குறைவான மக்களை கொண்டு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்று வருகிறது.

மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் சுவாமி காசி விசுவநாதர் எழுந்தருளிய தேர் கானல 9:30 மணிக்கு புறப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் சுவாமி தேர் சுற்றி வந்து நிலையை அடைந்த பிறகு உலகம்மன் எழுந்தருளிய தேர் 10.45 மணிக்கு புறப்பட்டது. திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News