தென்காசியில் பள்ளி வாகனங்களை வட்டார பாேக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

பள்ளிகள் திறப்பு. வாகனங்களில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு. 5 வாகனங்கள் பறிமுதல்.

Update: 2021-11-02 05:14 GMT

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தீடீர் ஆய்வு. 5 வாகனங்கள் பறிமுதல்.

தென்காசி மாவட்டத்தில் 1047 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி பேரூந்துகளில் முதலுதவி பெட்டி, அவசர கதவு, படிக்கட்டுகள், தீயணைப்பான் போன்றவற்றை வட்டார போக்குவரத்து துறை ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் 19 மாதங்கள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக குறிப்பிட்ட வகுப்பினர் தவிர பிற வகுப்பினருக்கு பள்ளிகள் நடைபெறாமல் இருந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் முறையாக சோதனைகள் செய்யப்படாமல் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் இயக்குவதாக வட்டார போக்குவரத்து துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தென்காசி வட்டார போக்குவரத்து துறையினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தகுதி சான்றிதழ் இல்லாமல் இரண்டு பள்ளிப் பேருந்துகளும், ஒரு கல்லூரி பேருந்தும், மூன்று சரக்கு வாகனங்களும் தகுதிச்சான்று, சாலை வரி, உள்ளிட்டவைகள் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் ஆறும் சிறைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரக்கு வாகனங்களுக்கு ரூ.92 ஆயிரம் சாலைவரியும், 25 ஆயிரம் அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இதேபோன்று வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News