சுரண்டையில் வணிகர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் மேளா

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பில் சிறு, குறு, மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு (MSME) சிறப்பு கடன் மேளா நடைபெறுகிறது

Update: 2023-01-19 02:48 GMT

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சுரண்டை கிளை மேலாளர் வெளிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பில் சிறு, குறு, மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு (MSME) சிறப்பு கடன் மேளா இன்று 19-01-2023, வியாழன் மாலை 5-00 மணியளவில் ஆலடிப்பட்டி வத்தல் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த லோன் மேளாவில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதி வணிகர்கள் கலந்துகொள்ளலாம். 

இம் முகாமில்

* வணிகத்தை விரிவு படுத்த,

* புதிய இயந்திரங்கள் வாங்க,

* வரையறுக்கப்பட்ட கடன்கள்

* நடப்பு கணக்கின் மீது அதிகபட்ச கடன் (OD)

* பொருட்கள் இருப்பின் பேரில் கடன் (CC)

* பிணைய உறுதிமொழி பேரில் கடன்

* பிணையத்தின் பேரில் வங்கி உத்திரவாத கடன்

* ஏற்றுமதி இறக்குமதி கடன் திட்டங்கள்

* மொத்த மற்றும் சில்லறை மருத்துவ பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான கடன்

* பல்வேறு வர்த்தக கடன்ஆகியவை வழங்கப்படும்.

குறைந்த வட்டியில்  எளிய தவணை முறை வசதியுடன் இந்த கடனுதவி வழக்கப்படுகிறது. மேலும், குறைவான செயல் முறை கட்டணம் விரைவான கடன் அனுமதி.  அனைத்து செயல்பாடுகளும் வங்கியின் வரன்முறைக்கு உட்படுத்தப்பட்டது எண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விபரங்களுக்கு வங்கி கிளை மேலாளர் தொடர்பு எண்கள்: 04633_ 261031, 9842325567 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான ஏற்பாட்டினை வியாபாரிகள் சங்கம், வத்தல் வியாபாரிகள் சங்கம், காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், சுரண்டை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஆகிய சங்கங்கள் இணைந்து  செய்துள்ளது.

Tags:    

Similar News