சுரண்டையில் அடர்வனம் அமைக்கும் திட்டம் துவக்கம்

சுரண்டை நகராட்சி பகுதியில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்

Update: 2022-05-07 15:45 GMT

சுரண்டை நகராட்சி பகுதியில் அடர்வனம்  அமைக்கும் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் நகரப்பகுதிகளில் அடர்வனங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  இத்திட்டத்தினை சென்னையில் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் (மியாவாக்கி முறையில்) அடர்வனம் அமைப்பதற்கு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆலோசனையில் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு உரக்கிடங்கு அமைந்திருக்கும் பகுதியில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தலைமையில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. உடன் நகராட்சி ஆணையர் லெனின், நகர்மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள், ஆறுமுகச்சாமி, பாலசுப்பிரமணியன், ராஜகுமார், உஷா, பிரபு, லட்சுமி, அந்தோணி, யேசுதாஸ், அபிஷேகம் செல்வி மற்றும் ராஜன் தர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News