பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவமுகாம்

சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர்

Update: 2022-08-06 12:15 GMT

பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் மாலதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் மாலதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள ஈச்சந்தா ஊராட்சி பெரியசாமிபுரம் கிராமத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞர் அவர்களின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் மாலதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.ஈச்சந்தா ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி முன்னிலை வகித்தார்

தென்காசி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புரோஸ்கான் தலைமையிலான டாக்டர் அனிகோல்டா எலிசபெத். டாக்டர்அசிரா, டாக்டர் பாலமுருகன் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர். மாரிமுத்துச்சாமி காசநோய் குறித்த சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

. இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஈச்சந்தா ஊராட்சி மன்ற செயலர் கந்தசாமி, சுகாதார மேற்பர்வையா ளர்கள் தனபாலன். முருகன் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா. சங்கரன் செல்வகிருஷ்ணன், கிருஷ்ணமுத்துசிவா, சங்கர், பாலசுந்தரம் கிராம சுகாதார செவிலியர்கள் செவிலியர்கள் மற்றும் ஆய்வக நுட்பனர்கள் மரியப்பன். திருமலைகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News