தென்காசியில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-31 13:18 GMT

ஆட்சியர் வளாகத்தில் குழந்தையுடன் தீ குளிக்க முயற்சித்த பெண்.

தென்காசியில் கணவர் 2வது திருமணம் செய்த நிலையில், அவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஆட்சியர் வளாகத்தில் குழந்தையுடன் பெண் தீக் குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தென்காசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் இன்று மனு அளிக்க வந்திருந்தனர்.

காலையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் அனைவரையும் பரிசோதித்த பின்னர் உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தாலும், அலட்சியமாக செயல்பட்டதாலும் இந்த சம்பவம் பெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, இவரது மனைவி துரை மீரா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சாகுல் ஹமீது 2வது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் சேர்த்து வைக்ககோரி கூறி ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது குழந்தையுடன் பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீர் ஊற்றி மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து துரை மீரா கூறுகையில், தனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆவதாகவும் கணவர் வெளிநாடு சென்று வேலை செய்து வந்தார். தற்போது மூன்று வருடங்களாக தென்காசியில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் நகை பணங்கள் என வரதட்சணை கொடுத்த நிலையிலும் மேலும் கேட்டு மாமியோரோடு சேர்த்து கணவர் தன்னை கொடுமை செய்து வருகிறார். மேலும் இது குறித்து புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் குழந்தை பிறந்த நிலையில் அழகாக இல்லை என்று கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனவே தனது பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் காவல்துறையினர் அலட்சியம் காரணமாக பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் தீண்டாமை கடைபிடிப்பதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளிப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே தேன்பொத்தை பஞ்சாயத்தில் தீண்டாமை கடைபிடிப்பதாகக் கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஆட்சியர் ஆகாஷிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News