உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2022-10-30 05:13 GMT

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்.

தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் மற்றும் நகராட்சி மற்றும் மனாட்சிகளில் சபை கூட்டம் தமிழக அரசு அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2022 அன்று காலை 11.00 மணியளவில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில் முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம் மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இணையவழி வீட்டுவரி/சொத்து வரி செலுத்துதல் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை பயனாளிகள் விவரம் மற்Sம் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட/புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு ,தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது.

இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவிதொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்பொழுது இணையதளத்தின் மூலம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வலைதளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 05 மணி வரை - 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் அசயாநயள;பஅயடை.உழஅ என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல் படிப்பு ஃ தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News