தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-05-27 04:23 GMT

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன் பெறும் திட்டத்தினை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து அறிவித்ததை ரத்து செய்து வழங்கிட கோரியும், மத்திய அரசு .01 01. 2022.முதல் அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் முருகவேல் ராஜ், வெங்கடேஸ்வரன், சுரேஷ், அந்தோணி ராஜ், மேடை ஈஸ்வரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரதாஸ் வரவேற்றார். மாநில மகளிர் அணி செயலாளர் மீனாட்சி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் குருசாமி, சந்திரன், பாலமுருகன், நடேசன், முருகவேல்ராஜ், அந்தோணிராஜ், வெற்றிவேலன், ஜேசுதாசன், ஆனந்தன், பேச்சியப்பன், முத்துப்பாண்டி, ஜான்சன், வெள்ளத்துரை, மாரியப்பன், எஸ்தர் ராணி, வெங்கடேசன், பொன்னுத்துரை, நெல்லையப்பன், சுடலை, ரெஜினா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News