குற்றாலம் படகு குழாமை திறந்து வைத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

குற்றாலம் படகு குழாமை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திறந்து வைத்தனர்.

Update: 2023-07-10 10:20 GMT

குற்றாலம் படகு குழாமை திறந்து வைத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

குற்றாலம் படகு குழாம்

குற்றாலத்தில் படகு குழாமை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடங்கி வைத்தனர்.

courtallam season, courtallam season today,தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது குற்றலாம்  சுற்றுலா தலம். இது இந்திய அளவில் மிகப்பெரிய சுற்றுலாதலமாக கருதப்படுகிறது. குற்றால அருவிகளில் இருந்து கொட்டும் அருவி தண்ணீரில் குளித்தால் மூலிகைகளால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அருள்மிகு குற்றால நாதர் கோவில் இம்மலையில் இருப்பதால் இந்த சுற்றுலா தலத்திற்கு குற்றாலம் என பெயர் வந்தது.


குற்றாலத்தில் சீசன் தாமதமாக துவங்கிய நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சீசன் காலத்தில் குற்றாலத்தில் ஒரே பொழுது போக்கு அம்சமாக திகழும் படகு சவாரி ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ண மடக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இன்று துவங்கப்பட்டது.

தென்காசி எம்.பி. தனுஷ் எம் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் முன்னிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் லிசா மற்றும் கிலெய்ர் ஆகியோர் படகு குழாமை திறந்து வைத்தனர்.


courtallam season, courtallam season today,தற்போது குளத்தில் படகுகளை இயக்குவதற்கு போதுமான அளவு தண்ணீர் வந்ததை தொடர்ந்து இன்று முதல் படகு சவாரி துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்தனர்.தற்போது 25 படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 5 துடுப்பு மூலம் இயக்கும் படகுகளும் மீதமுள்ள 20 பெடல் மூலம் இயக்கப்படும்.

courtallam season, courtallam season today,இரு நபர் மிதி படகுகளுக்கு 150 ரூபாயும் நான்கு நபர் படகுகளுக்கு 200 ரூபாயும் தனிநபர் துடுப்பு படகுக்கு 150 ரூபாயும் நான்கு நபர். படகுகளுக்கு 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், வட்டாரத் தலைவர் பெருமாள், தென்காசி நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன், ஆயிரபேரி மூர்த்தி உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News