குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்

குற்றாலம் சாரல் திருவிழா 2ம் நாளான இன்று மலர் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-08-06 12:55 GMT

குற்றாலத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சாரல் திருவிழா துவங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று மலர் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.

இந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இதில் ஊட்டி ஓசூர் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரவைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு தோட்டக்கலை துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி காய்கறி பழ கண்காட்சிகள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சிகளும் இடம்பெற்றன.

குறிப்பாக யானை அலங்காரம் மற்றும் பூக்கள் கொண்டு பொம்மை வடிவில் செய்யப்பட்ட உருவங்கள் அலங்காரத்தில் இடம் பெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். இன்று தொடங்கி மூன்று நாட்கள் இந்த கண்காட்சிகள் நடத்தப்படும் என தோட்டக்கலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News