பழைய இரும்பு கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

பழைய இரும்பு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

Update: 2023-03-24 01:31 GMT

பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த தென்காசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் பழைய இரும்பு குடோனில் பணியாற்றும் ஒருவரை குடோனில் உள்ள மரத்தில் இருந்த தேனீ தாக்கியுள்ளது.  இதனால் அவர் தேனீயை கலைப்பதற்கு தீ வைத்ததாகவும் அதன் பின்னர் தண்ணீர் ஊற்றி அணைத்த நிலையில் அந்த தீயானது புகைந்து மளமளவென தீப்பற்றி எரிந்து உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அங்குள்ள வேப்பமரம் முழுவதுமாக எரிந்து வருகிறது. மேலும் பழைய குடோன் என்பதால் இரும்பு சாமான் பொருட்கள் கிடப்பதால் அது வெடிக்கும் நிலையில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்தபடி தீயணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய ரப்பர் மற்றும் பலவகை பொருட்கள் எரிவதால் கரும்புகை எழும்பி வருகிறது நகரில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

Tags:    

Similar News