விவசாயிகளுக்கு பயன்படாத உழவன் செயலி: ஆன்லைன் முறையை கொண்டுவர வலியுறுத்தல்

உழவன் செயலியை கைவிட்டு . பழைய ஆன்லைன் முறையை கொண்டுவர தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு தீர்மானம்

Update: 2022-05-08 03:00 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது

விவசாயிகளுக்கு, பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் உழவன் செயலியை மாற்றி பழைய ஆன்லைன் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு   கூட்டத்திற்கு மாநில தலைவர் அருள் தலைமை வகித்தார். கூட்டத்தில் நான்கு வருவாய் கிராமத்திற்கு ஒரு வேளாண்மை விரிவாக்க அலுவலர் என்ற பணியின் பெயரை மாற்றி அறிவிக்க வேண்டும், கண்காணிப்பாளர் பணி தர நிலை உடைய உதவி விதை அலுவலர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புகளை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குவதற்கு தற்போது கணினி மயமாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியால், விவசாயிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே உழவன் செயலியில் மாற்றம் செய்ய வேண்டும், பழைய ஆன்லைன் முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில மாநாடு நடைபெற இருப்பதாக மாநில தலைவர் அருள் தெரிவித்தார்.மேலும் மாநில மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News