முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

முன்விரோதம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை.

Update: 2021-12-02 09:30 GMT

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பண்டாரம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கலங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோகன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11.05.2015 அன்று பரமசிவனின் மகன் பண்டாரம் என்பவர் விஜி மோகனை கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விஜி மோகனின் மனைவி ஷிபா, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது சம்பந்தமான வழக்கு தென்காசி கூடுதல் அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இளம் குற்றவாளியான பண்டாரத்திற்கு (27) நீதிபதி அனுராதா ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் அவதூறாக பேசியதாக உள்ள வழக்கில் 2,000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளியை காவல்துறையினர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags:    

Similar News