தென்காசியில் நமக்கு நாமே திட்டத்தில் இ-டாய்லெட்: நகர் மன்ற தலைவர் திறப்பு

தென்காசியில் பக்தர்கள்,சுற்றுலா பயணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இ-டாய்லெட்டை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார்

Update: 2022-09-18 10:00 GMT

தென்காசி கீழரத வீதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இ-டாய்லெட் நகர மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார்.

தென்காசியில் பக்தர்கள்,சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இ-டாய்லெட்டை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார்.

தென்காசியில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கட்டண கழிப்பிடம் வசதி மட்டுமே அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கீழரத வீதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இ-டாய்லெட் நகர மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அமைந்துள்ள இ-டாய்லெட்டில் கண்ணாடி வசதிகள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News