பாஜக வில் அண்ணாமலை ஐபிஎஸ் சுக்கு என்ன வேலை தெரியுமா? கருணாஸ் கண்டுபிடிப்பு

பாஜக வில் அண்ணாமலை ஐபிஎஸ் சுக்கு என்ன வேலை தெரியுமா? என கருணாஸ் கண்டுபிடித்து கூறி உள்ளார்.

Update: 2024-04-07 12:35 GMT

தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ்.

பா.ஜ.க.வில் ரவுடிகளுக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை ஐபிஎஸ் படித்துள்ளதாக தென்காசி தேர்தல் பரப்புரையின் போது நடிகர் கருணாஸ் பேட்டியளித்தார்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி இலஞ்சி பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

திமுகவை சேர்ந்த யாரும் என்னை வற்புறுத்தி இங்கு அழைத்து வரவில்லை, பாஜக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக தனக்கு படுத்தால் தூக்கம் வரவில்லை அதன் காரணமாகவே திமுகவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றேன்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு நபர்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தபோது என்னை பாஜகவின் சேர்வதற்காக அழைத்தனர். எனக்கு பணம் பதவி உள்ளிட்டவைகளை தருவதாக கூறி அழைத்த போதும் நான் செல்லவில்லை. அந்த வகையில் பாஜகவில் இருப்பவர்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இருப்பவர்கள் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசுகையில், அண்ணாமலை ஒரு ரவுடி எனவும், பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகளுக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை ஐபிஎஸ் படித்துள்ளார்.

டிடிவி தினகரன் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பது சுயநலத்திற்கான கூட்டணி என கூறிய அவர், தன்னை திகார் ஜெயிலில் வைத்தவர்களுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைத்திருப்பது சூழ்நிலைக்கான அரசியல் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Tags:    

Similar News