அரசு வேலைக்கு திமுகவினர் பரிந்துரை.. மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கு திமுகவினர் பரிந்துரை செய்ததை தவிர்த்து, மாவட்ட ஆட்சியர் நேர்மையாக நியமனம் செய்துள்ளார்.

Update: 2023-01-12 06:51 GMT

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் 

அரசு வேலையில் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் திமுக பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திமுக கட்சியினருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்ததாக கூறியதற்கு பதிலடியாக இரவோடு இரவாக நேர்மையாக சட்ட விதிப்படி நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி தமிழகத்தில் முதலில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி காட்டியுள்ளார்.

தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டது.

இதனிடையே தென்காசி குத்துக்கல் வலசையில் கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற திமுக உறுப்பினர் நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், கிராம உதவியாளர் பணி மற்றும் நியாய விலை கடை பணிகள் கட்சிக்காரர்களுக்கு கிடைப்பதற்கு அவர்களின் பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இரவோடு இரவாக தென்காசி மாவட்டத்தில்  8 வட்டங்களில் காலியாக உள்ள 53 கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை எண்: 574, நாள் : 17.10.2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகளை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆட்சியர்.

கிராம உதவியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டு, அதற்கான எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக தென்காசியில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .திமுக மாவட்ட செயலாளர் பேசியதற்கு பதிலடி தரும் வகையில் மாவட்ட ஆட்சியர் நேர்மையாக அறிவித்திருக்கும் இந்த பட்டியல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News