கேரளாவிற்கு கனிம வளம் கடத்துவதை தடுக்க கோரி தே.மு.தி.க. கலெக்டரிடம் மனு

கேரளாவிற்கு கனிம வளம் கடத்துவதை தடுக்க கோரி தே.மு.தி.க. விடம் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-05-08 10:48 GMT

கேரளாவிற்கு கனிம வளம் கடத்தப்படுவதை தடுக்க கோரி தே.மு.தி.க. வினர் மனு அளிப்பதற்காக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுத்திட கோரி 28-ஆம் தேதி ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கேட்டும், கனிமவளம் மூலம் தமிழக அரசிற்கு 300 கோடி ரூபாய் இழப்பீடு செய்வதை கண்டித்தும் தே.மு. தி.க. - வினர் ஆட்சியர் அலுவலகத்தில மனு அளித்தனர்.

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம், எம்சாண்ட், ஜல்லிக்கற்கள் மற்றும் கிரசர் பொடி ஆகிய கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கோரி இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் அளவிற்கு அதிகமாக கனிமவளம் கொண்டு செல்லப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினர் அளவிற்கு அதிகமாக கனிமவளம் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து தெற்கு மாவட்ட செயலாளர் பழனிக்குமார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் குவாரிகளில் இருந்து நாள்தோறும் சுமார் 50 டன் எடை கொண்ட நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் எம்சாண்ட், ஜல்லிக்கற்கள்,அளவுக்கு அதிகமாக கொண்டு சொல்லப்படுவதை கண்டித்தும், அவ்வாறு செல்லும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள் மாணவ மாணவியர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேநிலை தொடர்ந்தால் ஆலங்குளம், தென்காசி சட்டமன்ற தொகுதிகள் குடிநீர் இல்லாத பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலங்குளம், தென்காசி தொகுதிகளில் இயங்கி வரும் 50 குவாரிகளில் அரசு அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமான கற்களை குவாரியிலிருந்து கொண்டு செல்லப்படுவதால் தமிழக அரசுக்கு சுமார் 3 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்ட வருகிறது. இதில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி கொண்டு ஆய்வு செய்து 300 கோடி இழப்பீடு செய்த தொகையை, தமிழக அரசுக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசை ஏமாற்றி வரும் கல்குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் வருகிற 28ஆம் தேதி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி தே.மு.தி.க.வினர் வழங்கினர்.

Tags:    

Similar News