தென்காசி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

தென்காசி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-04-29 03:02 GMT

தென்காசியில் மந்தகதியில் செயல்படும் உழவர் சந்தையை மேம்படுத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தராஜ் நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே அமைந்துள்ள உழவர் சந்தை கடந்த 2000 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 60 கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது.

மாதம் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 1லட்சம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தனியார் வியாபாரிகளின் ஆதிக்கத்தால், உழவர் சந்தைக்கு வரும் மக்கள் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் உழவர் சந்தையில் விற்பனை மந்தமாகி வருகிறது. இதன் காரணமாக உழவர் சந்தையில் வணிகம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ வரை காய்கறிகள் விற்பனையாவதே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இதனை சரிசெய்யும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால் சுந்தர்ராஜ் உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் உழவர் சந்தையை பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News