திமுக அரசை கண்டித்து போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-10 02:00 GMT

அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தென்காசி பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என கைவிரித்த திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் மண்டல செயலாளர் ராமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் சேர்ம துரை, கவுன்சிலர் சந்துரு, நகர செயலாளர் சுடலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News