தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் தீப திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் காசி விசுவநாதா் ஆலயத்தில் திருக்காா்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான மக்கள் பங்கேற்பு.

Update: 2021-11-20 01:17 GMT

தென்காசி காசிவிஸ்வநாதர் காேவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் காசி விசுவநாதா் ஆலயத்தில் திருக்காா்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான மக்கள் பங்கேற்பு.

வடக்கே உள்ள காசிக்கு நிகராக கருதப்படுவது தென்காசி காசிவிசுவநாதா் ஆலயம். அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதா் ஆலயம் இரண்டாம் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பாக காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக 2 தினங்கள் நடைபெறுகின்றது.

திருவிழாவினை ஒட்டி திருக்கோவிலில் நேற்று மாலை பரணி தீபம் சுவாமி சன்னதி மண்டபத்தில் ஏற்றப்பட்டது. திருக்காா்த்திகை தினமான இன்று மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா். குடைவாயில் தீபாராதனைக்கு பிறகு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.

கோவிலின் முன் அமைக்கப்பட்ட சொக்கப்பனை முன்பு சுவாமி அம்பாள் ஏழுந்தருள பரணி தீபத்திலிருந்து தீபம் கொண்டுவந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News