குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-09-13 07:30 GMT

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பாஜகவினர்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில்,  கடந்த 19 மாதங்களாக  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு யாரையும் அனுமதிக்காததால், அங்குள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை ஏற்று, விரைவில் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று தென்காசி பாஜகவைச் சார்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்ரமணியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், கடையநல்லூர் நகராட்சி பகுதியில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தனியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தென்காசி தைக்கா தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு, பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News