குற்றாலம் சித்திரை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் விசு திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-04-09 07:28 GMT

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் விசு திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது பல ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றாலநாதர் திருக்கோயில் தென் மாவட்டங்களில் உள்ள சிறப்புமிக்க புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பஞ்ச சபையில் ஒன்றான சித்திர சபை இங்கு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.  இந்த கோவில் திருவிழாக்கள் அனைத்தும் சித்திரசபையை அமைந்துள்ள ரதவீதிகளில்நடைபெறும். அகத்திய முனிவரால் பெருமாள் சிலையை லிங்கமாக மாற்றியதாக கோயில் தலபுராணம் கூறுகிறது. பல்வேறு அரிய வகை மூலிகைகளை கொண்டு வரையப்பட்ட மூலவருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாவராதனை விசேஷமான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் குற்றாலநாதர் கோவிலில் கடந்த ஐந்தாம் தேதி சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அன்றிலிருந்து தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் என தினமும் நடைபெற்று வந்தது. விழாவின் ஐந்தாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

நான்கு தேர்களான விநாயகர் தேர், முருகன் தேர், குழல்வாய்மொழி அம்மை தேர், நடராஜர் தேர் பக்தர்களால் ஒன்றன்பின் ஒன்றாக வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மேளதாளங்கள் இசை முழங்க, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

Similar News