Complaint Against Basic Facilities குற்றாலத்தில் அடிப்படை தேவைகள் ஆண்டுக்கு ஆண்டு, அதே புகார்

Complaint Against Basic Facilities குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2023-11-27 07:44 GMT

 குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சாலையில் உணவு சமைக்கும் ஐயப்ப பக்தர்கள்.

Complaint Against Basic Facilities

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் சென்று அங்கு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

 ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம் 1-ம் தேதியிலிருந்து குற்றால அருவிக்கு வருகை தந்து நீராடி சென்று வருகின்றனர். மேலும், ஏராளமான வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு முன்பு குற்றால அருவிக்கு வருகை தந்து நீராடி வருகின்றனர்.

அந்த வகையில், குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் உணவு வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சாலைகளில் ஓரமாக சமையல் செய்து உண்ணும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேபோல், சீசன் காலகட்டங்களில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்தாமல் உள்ளதால் ஆங்காங்கே குப்பைகள் சூழ்ந்த பகுதியாக குற்றாலம் காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, குற்றாலம் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே சுற்றுலா பயணிகளுக்குதேவையான குடிநீர், கழிவறை, மற்றும் தங்கும் வசதி, சமைக்கும் வசதி உள்ளிட்டவைகளை செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News