கடையநல்லூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா

கடையநல்லூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-11 15:19 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில், நகர்மன்ற தலைவர் திமுக-வை சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரியை அமல்படுத்துதல் தொடர்பாக பொருள் வைக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கிய உடனே வைக்கப்பட்ட 3 பொருட்களும் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்த சில நிமிடத்திலேயே உறுப்பினர்களின் ஆலோசனை கேட்காமல் தீர்மானம் நிறைவேட்டபட்டதாக கூறியதை கண்டித்து உறுப்பிகள் கூச்சலில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுக, பாஜக, அமமுக, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 14 கவுன்சிலர்கள் தீர்மானத்தை கண்டித்து கூட்டரங்கிலேயே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News