குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

குற்றாலம் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-05 06:07 GMT

குற்றாலம் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குற்றாலம் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாக விளங்கும் தென்காசி மாவட்டம் குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது நாள்தோறும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் ஐந்தாம் திருநாள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 7-ஆம் திருநாள் காலை மாலை இருவேளைகளிலும் நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 8-ஆம் திருநாள் சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான பத்தாம் திருநாள் காலை சித்திரை விஷு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News