சித்திரை திருவிழா குற்றாலநாதர் ஆலயத்தில் தோரோட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை விசுத் திருவிழாவை யொட்டி நடைபெற்ற திருத் தோரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2021-04-09 06:57 GMT

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசுத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், திருவாதிரை திருவிழா வெகு விமர்சையாக 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அமைதி வழங்காத நிலையில் இந்தாண்டு சில தளர்வுகளுடன் தடை நீக்கப்பட்ட நிலையில் இவ்விழா கடந்த 5ம் தேதி குற்றாலநாத சுவாமி சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனையுடன் வேத மந்திரங்களுடன், பஞ்ச வாத்தியத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

இவ்விழவின் முக்கிய நிகழ்வான 5 ம் திருவிழாவையொட்டி விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் தனிதனியாக அலங்கரிக்கப்பட்ட 4 தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுவடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் வரும் 8 ம் திருநாளையொட்டி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு பஞ்சை மலர்களால் அலங்காரம் செய்து தாண்டப தீபாரதனை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடம் கட்டளைதார்களும் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News