தென்காசி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வேட்பாளர்கள்

தென்காசி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்களித்தனர்.

Update: 2021-10-09 08:15 GMT

தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் சரோஜா.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், ஆகிய ஐந்து ஊராட்சி  ஒன்றியங்களுக்கு இன்று  தேர்தல் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்ட 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிகவை சேர்ந்த சரோஜா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ராம்குமார் ஆகியோர் காசிமேஜர்புரம் பகுதியிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் தங்களது வாக்கையை செலுத்தினார். அதேபோல் தேமுதிக ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன் மற்றும் பாமக மாநில துணைச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் வாக்களித்தனர்.

Tags:    

Similar News