குற்றாலஅருவிகளில் குளிக்க 30ம் தேதி வரை தடை

Update: 2021-04-21 10:15 GMT

குற்றாலம் மெயினருவி

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வரும் 30 ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் மற்றும் நீர் நிலைகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் வருகிற 30-ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி தொழில் செய்து வரும் கடைகள், உணவு விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலத்திற்கு வருகை தந்து தங்கும் விடுதியில் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து நடவடிக்கை எடுக்காததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து நிலவி வருகிறது.

Tags:    

Similar News