வனவாசிகளின் வாழ்வாதாரம் மூங்கில்.. இன்று உலக மூங்கில் தினம்

இன்று (செப்டம்பர் 18ம் தேதி) உலகம் முழுவதும் மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.

Update: 2022-09-18 07:04 GMT

பைல் படம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்சைடு) எடுத்துக்கொண்டு, அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் வளர்ந்த இடம் அதிக குளிர்ச்சியாக இருக்கும்.

இயற்கை, இந்தியாவிற்கு கொடுத்த கொடை 'மூங்கில்". இதை மத்திய அரசாங்கம் 'தேசிய மூங்கில் இயக்கம்" என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 1,400 மூங்கில் இனங்கள் உள்ளன. மூங்கில் பயன்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. இது சமையல், கட்டுமானம், கைவினைப் பொருட்களை உருவாக்குதல் மற்றும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். மூங்கில் இயற்கை காற்றுச்சீரமைப்பிகளாக வேலை செய்கிறது மற்றும் சுற்றியுள்ள வெப்பநிலையை 8 டிகிரி வரை குளிர்விக்கும்.

உலகில் வேகமாக வளரும் தாவரமாக மூங்கில் கருதப்படுகிறது. சில வகை மூங்கில் 24 மணி நேரத்திற்குள் 36 அங்குலம் வளரும் என்று கூறப்படுகிறது. மூங்கில் தண்டுகளின் மூட்டுகள் சிலிக்காவை உருவாக்குகின்றன, இது ஒரு மருந்தாக செயல்படுகிறது. பூகம்பத்தின் போது மூங்கில் தோப்புகள் பாதுகாப்பான இடமாக இருக்கும்.

Tags:    

Similar News