பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Public Awareness - பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுரண்டை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2022-07-20 04:30 GMT

தென்காசி அருகே சுரண்டை பேருந்து நிலையத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் பேசிய காவல்துறை ஆய்வாளர் சுதந்திரா தேவி

Public Awareness - சுரண்டை  பேருந்து நிலையத்தில்   காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாமை  காவல் ஆய்வாளர்  சுதந்திரா தேவி  தொடக்கி வைத்து பேசினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அதனை தடுக்கவும் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் காவல்துறையின் உதவியை பொதுமக்கள் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்‌‌.

அதனடிப்படையில்,  ஆலங்குளம் போலீஸ் டிஎஸ்பி பொன்னரசு ஆலோசனையில் சுரண்டை  காவல்நிலைய ஆய்வாளர்  சுதந்திரா தேவி சுரண்டை  பேருந்து நிலையத்தில்  நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பேசினார். இதில் உதவி ஆய்வாளர்கள் வேல்சாமி, பிள்ளையார் மற்றும் போலீசார், பொதுமக்கள் பயணிகள்  கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News