தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் மனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-15 17:25 GMT

தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் நாளான இன்று ஊராட்சி தலைவர் பதவிக்கு மட்டும் 8 பேர் வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கு ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சி தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 221 ஊராட்சி தலைவர் பதவி, 1905 வார்டு உறுப்பினர் பதவி, 144 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி, 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று பெரும்பாலான இடங்களில் வேட்பு மனுக்கள் மட்டுமே வாங்கி சென்றனர்.

தென்காசி ஒன்றியம் மத்தாளம்பாறை ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், ஆலங்குளம் ஒன்றியம் வாடியூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குறிஞ்சாப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர், கீழப்பாவூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி புதிய மாவட்டமாக இருக்கும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி துறை அதிகாரிகளும் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

(தகவல் : மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் தகவல்கள் தாமதமாக வந்துள்ளது)

Tags:    

Similar News