300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் வழக்கில் 3 பேர் கைது

Tobacco News -அம்பை அருகே 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-07 06:18 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும்   கைதானவர்கள். 

Tobacco News -தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்காக அதிரடி நடிவடிக்கை எடுத்து பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபவர்கள் மீது குண்டர் சட்டம் போன்ற பல்வேறு அது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த பாபநாசம் - கடையம் சாலையில் வி.கே.புரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் அந்த பகுதியிலுள்ள கடைகளுக்கு அடி‌க்கடி சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் பைக்கில் சென்று வந்தது.  இதைத்தொடர்ந்து அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர்.  அந்த காரில் 3வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பதில் சொன்னார்கள். இதனால்  காரில் சோதனை நடத்தினர்.  அதில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீ.கே.புரம் போலீசார் 3பேர்களையும் காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து  வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தொடர்பாக  கடையம் அருகே உள்ள மாலிக் நகர் பகுதியை சேர்ந்த அஜ்மீர் அலி(36), முகமது ஹாலித் மற்றும் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த முகமது தாவிஹ் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார், பைக் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பலை சேர்ந்தவர்கள் புகையிலை பொருட்களை வெளி ஊர்களில் இருந்து கடத்தி கொண்டு வந்து அம்பை பகுதிகளில் உள்ள கடைகளில் ரகசியமாக கொடுத்து விற்பனை  செய்து வந்துள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் ரகசியமாக விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இவர்கள் புகையிலை பொருட்களை எங்கு இருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்தும் இவர்களுடன்  சேர்ந்து எத்தனை பேர் இவ்வாறு புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை விசாரித்து வருகின்றனர். புகையிலை பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் அம்பை பகுதியில்  புகையிலை பொருட்களை   விற்பனை    செய்வதற்காக ரகசியமாக கொடுத்த கடைவியாபாரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 300 கிலோ புகையிலை பொருட்கள்   பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பாக இருந்தது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News