தென்காசி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக அணைகளை ஆட்சியர் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, இராமநதி, அடவி நயினார்கோவில், கருப்பாநதி ஆகிய நீர் தேக்கங்கள் உள்ளன.

Update: 2021-06-14 06:34 GMT

தென்காசி மாவட்ட அனைகளான கடனாநதி, இராமநதி, அடவி நயினார்கோவில், கருப்பாநதி ஆகிய நீர் தேக்கங்கள் உள்ளன. இந்த நீர்தேக்கங்களில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

கடனாநதி நீர் தேக்கத்தில் திருநெல்வேலி எம்.பி. ஞான திரவியம், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்தனர். கடனாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 125 கன அடியும், இராமநதி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 60 கன அடியும், கருப்பா நதி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 25 கன அடியும், அடவிநயினார்கோவில் நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 60 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 140 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் நேரடியாக 8225.46 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது. மேலும் இராமநதி நீர் தேக்கத்தை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கபடும். என எம்.பி தெரிவித்தார்.

Tags:    

Similar News