தென்காசியில் பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசியில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து வாகனத்திற்கு பாடைகட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-06-11 06:50 GMT

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து  தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் காதர் மைதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதை தெரிவிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்திற்கு பாடை கட்டப்பட்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் இடையே சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு வருட காலமாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசைக் கண்டு கொள்வதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ 35க்கு விற்பனை செய்வோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது. 300 ரூபாய்க்கு விற்ற எரிவாயு உருளை தற்போது ரூ.950 விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோன்ற விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மத்திய அரசின் தவறான அணுகுமுறையினால் தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய அரசு வல்லரசாக மாற ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல்,விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளிராஜா, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சுப்பையா, நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #பெட்ரோல் #டீசல் #விலை #உயர்வு #நூதனஆர்ப்பாட்டம் #diesel #petrol #priceup #increase #gain 

Tags:    

Similar News